திருமதி கிஷோரி ஜே உதேசி இந்தியா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் முதல் நிர்வாக இயக்குநர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். துணை ஆளுநராக, அவரது இலாகாக்களில் ஒன்று, வங்கி மற்றும் வங்கி அல்லாத துறையின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கியது. சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கியால் அமைக்கப்பட்ட வங்கி மேற்பார்வைக்கான பேசெல் கமிட்டியின் கோர் பிரின்சிபில்ஸ் லயசன் குரூப் மற்றும் கோர் பிரின்சிபில்ஸ் வொர்க்கிங் குரூப் ஆன் கேபிடல் ஆகியவற்றில் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியாக இருந்தார்.
துணை ஆளுநராக அவர் SEBI, NABARD, மற்றும் EXIM வங்கியின் நிர்வாகக் குழுவின் அங்கத்தினராக இருந்தார். மேலும் அவர் பாரதிய ரிசர் பேங்க் நோட் முத்ரன் (பிரைவேட்) லிமிடெட், பெங்களூரு-இன் தலைவராகவும் பதவி வகித்தார். அவர் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனின்
பெர்ஜிஸ் தேசாய்
”
ஜெ. சாகர் அசோசியேட்சின் முன்னாள் மூத்த பங்குதாரரான திரு. தேசாய் இப்போது ஒரு தனியார் வழக்கறிஞர். கார்ப்பரேட் மற்றும் வணிகவியல் சட்டத்தில் நிபுணரான அவர் 1980 முதல் பயிற்சி செய்து வருகிறார். 1997 முதல் 2003 ஆண்டு வரை உத்வாடியா, உதேஷி & பெர்ஜிஸ்-இன் நிர்வாகப் பங்குதாரராக இருந்தார். திரு. தேசாய் தற்போது இந்திய நடுவர் மன்றம் மற்றும் லண்டன் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் நடுவர் குழுவில் உள்ளார். அவர் ஒரு முன்னணி இந்திய நாளிதழில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் அமெரிக்க நடுவர் சங்கத்தின் இணை உறுப்பினராகவும், ICC-இந்தியா மற்றும் பாம்பே-இன்கார்பரேட்டட் லா சொசைட்டியின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் தற்போது பல நிறுவனங்களில் செயல் பொறுப்பில்லாத சுயாதீன குழு உறுப்பினராக குழுப் பதவிகளை வகிக்கிறார்.
பி.எச்.ரவிக்குமார்
”
நிதிச் சேவைகள் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கமர்ஷியல் பேங்கராக அனுபவம் பெற்றுள்ள திரு ரவிக்குமார் வாஸ்து ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் செயல் பொறுப்பில்லாத இயக்குநர் ஆவார். ICICI பேங்க் லிமிடெடை அமைத்து கட்டமைத்த முக்கியக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினர். அவருடைய அணியுடன் சேர்ந்து நேஷனல் கம்மாட்டிடீஸ் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெடை கருத்துருவாக்கி அதன் நிறுவனர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்தார். இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் பேங்கர்ஸ் மற்றும் சார்டர்ட் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் பேங்கர்ஸ் லண்டனின் அசோசியேட்டாக தொழிலர் தகுதி பெற்ற காமர்ஸ் பட்டதாரியான அவர் லண்டனின் செக்யூரிட்டீஸ் இன்வெஸ்ட்மெண்ட் இன்ஸ்ட்டியுட்-இன் ஃபெல்லோவும் ஆவார்.
பாபி பாரிக்
”
பாபி பாரிக் ‘பாபி பாரிக் அசோசியேட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். அந்த நிறுவனம் உத்திசார் வரி மற்றும் ஒழுங்குமுறை ஆலோசனைகள் சேவைகள் வழங்கும் ஒரு சிறு நிதி நிறுவனமாகும். அவர் கவனம் செலுத்தும் துறையானது பரிவர்த்தனைகள் மற்றும் பிற வகையான வணிக மறுசீரமைப்புகள், அவை உள்வரும், வெளிச்செல்லும் அல்லது முழுவதும் உள்நாடு சார்ந்தாக இவற்றில் ஏதுவாக இருந்தாலும் அவை தொடர்பாக வரி மற்றும் ஒழுங்குமுறை ஆலோசனை வழங்குவது. பாபி தனியார் ஈவிட்டி ஃபண்டுகள், பிற நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் பெருமளவு பணி செய்கிறார். புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவ உள்ளீடுகளை வழங்குவதில், அவர் ஒழ்ங்குமுறையாளர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து பணி புரிகிறார் . பாபி மிகவும் மதிக்கப்படும் வரி மற்றும் பரிவர்த்தனை நிறுவனமான BMR அட்வைசர்ஸின் இணை நிறுவனராகா இருந்து அந்த நிறுவனத்தை நிறுவி 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் இயக்கத்திற்கும் உதவிபுரிந்தார். இந்தியாவில் எர்ன்ஸ்ட் அண்ட் யங்கின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், ஆர்தர் ஆண்டர்சனின் கண்ட்ரி மேனேஜிங் பார்டனருமான பாபி, பல வர்த்தக மற்றும் வணிகச் சங்கங்களில் உறுப்பினராகவும், அரசு சாரா நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் மற்றும் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆலோசனை மற்றும் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவர் மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டதாரி மற்றும் தகுதிபெற்ற சார்டட் அக்கவுண்டண்ட் ஆவார்.
கென்னத் ஆண்ட்ரேட்
”
ஓல்ட் பிரிட்ஜ் கேபிடல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான கென்னத் ஆண்ட்ரேட், இந்தியா பங்குச் சந்தையில் 26 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர், அவர் கவனம் செலுத்தும் துறைகளாவன போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் ரிசர்ச் ஆகும். இதற்கு முன்பு, அவர் IDFC அசெட் மேனேஜ்மெண்டில் முதன்மை முதலீட்டு அதிகாரியாகப் பதவி வகித்தார், அங்கு அவரது கண்காணிப்பின் கீழ் US$ 9 பில்லியன் மதிப்புள்ள கார்பஸ் நிதி இருந்தது. அவரது திறன்மிக்க தலைமைத்துவத்தி கீழ், IDFC அசெட் மேனேஜ்மெண்ட் இந்தியாவிலியே மிக விரைவாக வளர்ச்சியடையும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமாக வரிசைப்படுத்தப்பட்டது. IDFC அசெட் மேனேஜ்மெண்டில் பணிபுரிவதற்கு முன் அவர் கோடக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் போர்ட்போலியோ மேலாளராகப் பதவிவகித்தார், இந்த இரு நிறுவனங்களின் அசெட் மேனேஜ்மெண்ட் வணிகத்தை வளர்ச்சியடையச் செய்ததில் இவரின் பங்கு மிக முக்கியமாகும். அவர் மும்பை பல்கலைக்கழகத்தின் N.M காலேஜ் ஆஃப் காமார்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் துறையில் காமர்ஸ் பட்டம் பெற்றவர் ஆவார்.