தலைமைத்துவ அணி

ரஜத், நிறுவனர் மற்றும் துவக்கியவர்

ரஜத் Inheritance Needs Services Pvt. Ltd. (INSPL) நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் ஆவார், அவரது மனைவி தேவ்ஜானி இணை நிறுவனராகப் பதவி வகிக்கிறார்

அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ளார் மற்றும் சார்டட் அக்கவுண்டண்ட் மற்றும் கம்பனி செக்ரட்ரிஸ் ஆஃப் இந்தியாவின் ஃபெல்லோ உறுப்பினரும் ஆவார்.

அவர் தனது தொழில் பயணத்தை இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து துவங்கினார். ஜவுளி, மருந்துகள், கடன் மதிப்பீடு, ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ், ஹைட்ரோகார்பன் மற்றும் முதலீட்டு வங்கி போன்ற பல்வேறு துறைகளில் கார்ப்பரேட்களுடன் நிதி, செயலகம் மற்றும் சட்டப் பணிகளைக் கையாள்வதில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.

ரஜத்தின் கார்பரேட் அனுபவம் PIPE, IPO, உரிமைகள் மற்றும் முன்னுரிமை ஒதுக்கீடுகள் மூலம் பங்கு விற்பனை செய்யும் நிறுவனங்களில் மூலோபாய முதலீட்டாளர்கள், தனியார் பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் பொதுச் சந்தை முதலீட்டாளர்கள் -(சில்லறை விற்பனை மற்றும் நிறுவன) உள்ளிட்டவர்களை கையாள்வதை உள்ளடக்கியதாகும். மதிப்பீட்டுப் பணியின்போது CRISIL-இல் அவர்பல்வேறு மூலதன கருவிகள் மற்றும் கட்டமைப்புகளில் அனுபவம் பெற்றார். IPO சந்தைகளில் பயன் பெற்ற Torrent குழுமத்தின் முதல் நிறுவனந்தின் முக்கிய அணியில் அங்கம் வகித்தார் மற்றும் CRISIL-ஐ சந்தைக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் பெற்றார். கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அனுபவங்களுடன் உரிமை மாற்றம் மற்றும் வாரிசுரிமை ஆகிய விஷயங்களில் வேறுபட்ட சூழ்நிலைகளில் அனுபவம் பெற்றவர் அத்துடன், டீமெர்ஜர் செயல்முறைகளில் அவருக்கு நேரடி அனுபவம் உள்ளது. ரஜத் தொழில்முறையாக நிர்வகிக்கப்பட்ட, நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் குடும்ப வணிகங்களுடன் பணியாற்றியுள்ளார்.

மூலதன வெளியீடுகளைக் கட்டுப்படுத்துபவராக இருந்து SEBI நிர்வாகிக்கும் சத்தைகளின் ஃப்ரீ பிரைசிங் வரை ரஜத் பலவகையான சட்டப்பூர்வ அமைப்புகளின் கீழ் பணியாற்றியுள்ளார். ஆரம்பப் பப்ளிக் ஆஃப்பரிங்குகள், ரைட்ஸ் இஷ்யூயன்ஸ், மற்றும் டீமெர்ஜர் செயல்முறையில் அவர் பெற்றுள்ள நேரடி அனுபவம் அவரது கோட்பாட்டியல் அறிவிற்கு ஆதரவளிக்கும் வகையில் அனுபவ நுணுக்கங்களை வழங்கியுள்ளது.

INSPL-இன் தற்போதைய சேவைகள் பல்வேறு எதிர் தரப்பினருடன் தொடர்புகொள்வது, பங்குதாரர்களுடன் தொடர்ந்து தொடர்கண்காணிப்பு மேற்கொள்வது, பிரதிநிதித்துவ தகவல்தொடர்புகளின் அடிப்படையை உருவாக்கும் மற்றும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு முறையான பிரதிநிதித்துவத்தை அனுமதிக்கும் கருத்துக்களின் தெளிவு ஆகியவற்றை உள்ளடக்கியது.

ரஜத் மற்றும் தேவ்ஜானிக்கு பல்வேறு துறைகளில் அனுபவம் மற்றும் பன்முக கல்விப் பின்னணி கொண்ட இளம் பேரார்வமிக்க தொழிலர்கள் அடங்கிய அணியின் ஆதரவு உள்ளது, இந்த அணியினர் வங்கி, நிதி, செயலகம், சட்டம், முதலீட்டாளர் உறவு மற்றும் பங்குப் பதிவு போன்ற துறைகளில் வலுவான அனுபவ அறிவும் கார்பரேட் அனுபவமும் பெற்றுள்ள சுய உந்துதல் உள்ள தொழிலர்கள் ஆவார்.

Shobhana Iyer

ஷோபனா ஐயர், தலைமை இடைமுக அதிகாரி

ஷோபனா இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களில் பணி புரிந்துள்ள நிதி நிபுணர் ஆவார்.

இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் வென்ச்சர் ஃபண்ட் (உலக வங்கி இணை நிதியுதவி அளித்தது) நிறுவன அணியில் உறுப்பினராக தனது தொழில் பயணத்தைத் துவங்கினார். முக்கிய அணியின் ஒரு அங்கமாக அமைப்புகள் அமைத்தல், திட்ட மதிப்பீடு, மூலதனக் கட்டமைப்பு, ட்யூ டெலிஜன்ஸ் விநியோகம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

ICICI வங்கியின் குரூப் கிரெடிட் ரிஸ்க் அணியில் இடர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பில் தனது திறனை மேம்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் துபாய்க்குச் சென்று ஃபர்ஸ்ட் மார்ட்கேஜ் ஃபைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். அங்கு அவர் மாஷ்ரெக் வங்கியில் மார்ட்கேஜ் டெஸ்க் அமைப்பதில் உறுதுணையாக இருந்தார். பின்னர் அவர் ஷேக் முகமது பின் ரஷீத் எஸ்டாப்ளிஷ்மெண்ட் (துபாய் அரசு நிறுவனம்)-இல் ஆலோசகர்- ஸ்பெஷல் புராஜக்ட்-ஆகப் பணிபுரிந்தார்.

மூத்த பிரைவேட் லேண்டிங் நிபுணராக கடன் வணிக வளர்ச்சிக்கு உதவும் வகையில் பன்னாட்டு வங்கியில் பணிபுரிந்த காரணத்தால், அவருக்கு வெல்த் மேனேஜ்மெண்ட் சர்வீசின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆழ்ந்த புரிதல் உள்ளது.

ஷோபனா ஒரு தகுதிபெற்ற C.F.A (இந்தியா), மற்றும் M. B. A. (ஃபைனான்ஸ்) பட்டம் பெற்றவர்.

Sandeep Vadnere

சந்தீப் வட்நேர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி

என்ஜினியரிங், சேவை மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள புராடக்ட் ஸ்ட்ராடஜிஸ்டான சந்தீப், ஹெட் ஹான்சோஸின் முக்கிய அணியின் ஓர் அங்கமாகவும் இருந்தார். இந்தப் பதவியை வகித்தபோது அவர் இன்ஜினியரிங் மற்றும் புராடக்ட் அணிகளை நிறுவி மேம்படுத்தினார். மேலும் நிலையான வெற்றிகரமான வணிகக் கருத்தாக்கம் முதல் அதைப் பெருக்குவது வரையான அனைத்து செயற்படிகளில் ஈடுபட்டார். புராடக்ட் ரோட்மேப் மற்றும் டெக்னாலஜி லேண்ட்ஸ்கேப்பை வரையறுப்பதில் சந்தீப் உறுதுணையாகச் செயற்பட்டார்.

ஹெட் ஹான்ச்சோஸைத் தொடங்குவதற்கு முன்பு, குர்கானில் அமைந்துள்ள பூட்டிக் ஆலோசனை நிறுவனமான காஸ்பர் கன்சல்டிங்கின் நிறுவன உறுப்பினர்களில் சந்தீப்பும் ஒருவராக இருந்தார்.

அவர் டெல்லியில் ‘லீப் ஆஃப் ஃபெய்த்’ (முழு விநியோகம்) -ஐத் தொடங்கினார்.

இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் முன்னாள் பட்டதாரியான சந்தீப், மும்பையில் உள்ள VESIT இல் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் இளங்கலை பட்டத்தையும், ஜாம்ஷெட்பூரில் உள்ள XLRI ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அண்ட் ஹியூமன் ரிசோர்சஸ்-இல் PGDM பட்டத்தையும் பெற்றுள்ளார்.

wpChatIcon