அனுபுள்ள வாடிக்கையாளர்காலே, கூட்டாளர்களே, நலம் விரும்பிகளே,
எங்களின் ஆலோசகர்கள் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாய உள்ளீடுகள், எங்கள் அணியின் பேரார்வம் மற்றும் உறுதிப்பாடு மற்றும் பல்வேறு சந்தைப் பங்கேற்பாளர்களின் பின்னூட்டம் ஆகியவற்றுக்கு நன்றி. இவற்றின் மூலம்தான் INSPL இந்தியாவில் மரபுவழிச் சொத்தைப் பரிமாற்றும் சேவையில் முன்னோடியாக இருக்க முடிகிறது.
எங்களின் கனவைக் கருத்தாக்கமாக மாற்றி அதைத் தற்போதைய சேவையாக செதுக்கி வழங்கும் அதே வேளையில் எங்களின் சேவைகளை நுண்ணாய்வு செய்த எங்களின் நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்களின் ஆதரவுக்கு நன்றியுடைவார்களாக இருக்கிறோம். அவர்கள் அளித்த உள்ளீடுகள் எங்களை மீளவும் திட்டமிடச்செய்து இறுதியில் கிட்டத்தட்ட முழுமையான மற்றும் சந்தையில் ஏற்கப்படும் சேவையை வழங்குவதில் முடிவடைந்தது.
‘பின்பற்றுபவர்கள்’ என்ற வார்த்தையை நம்மில் பெரும்பாலானவர்கள் நடுநிலைப் பள்ளியில் ‘காப்பிகேட்’ என்ற பதத்திற்கு ஒத்தசொல்லாகப் பயன்படுத்தியிருப்போம். நாம் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது, முதிர்ச்சி மற்றும் மதிப்பார்வம் ‘எமுலேட்டர்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வைத்தது.
INSPL செய்வதையே செய்ய முனையும் நிறுவனங்கள்/மக்கள் இருக்கிறார்கள், தொடர்ந்து இருப்பார்கள். அவர்கள் அசல் யோசனைகளில் இருந்து உருவாக்கிய அதே போன்ற சேவைகளை குறைந்த வேறுபாடுகளுடன் வழங்குவார்கள். அவர்கள் அந்தச் சேவையை தங்கள் சொந்த உருவாக்கம் என உரிமையும் கோருவார்கள். பொதுவாக வாடிக்கையாளர்கள்/சேவை பெறுநர்களுக்கு அசல் மற்றும் மறுஉருவாக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. அவர்களது வரையறுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற அவர்களுக்கு விருப்பமான விலை மற்றும் நேரத்தில் அவர்களுக்குத் தேவையான சேவை வழங்குநருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். எனினும், அசலுக்கும் நகலுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கூடுதலாக, அசல் ஊக்கத்திற்கு போதுமான பாராட்டு அளிக்கப்பட வேண்டும். ஊக்கமே எங்கள் சேவை உருவாக்கத்தின் மையமாக இருந்து வருகிறது.
எங்கள் சிந்தனை மையக் குழு இப்போது இருக்கும் குறைபாடுகள்மீது வேலை செய்து அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதாவது சொத்துக்கள் உரிமைமாற்றம் தொடர்புடைய சவால்களுக்கான தீர்வைக் கண்டுபிடித்துள்ளது.
இதன் மூலம் அர்த்தமுள்ள, மனித நடத்தையில் மாற்றத்தை முன்மொழிந்து அதை மேம்படுத்தும் சேவையை வழங்கும் எண்ணம் எங்களுக்கு உருவானது, அந்த எளிய யோசனை அதிக ஆழ்ந்த ஆய்வுகளின் மூலம் வளர்ந்து, சேவை வழங்குவதன் மூலம் ஓர் ஒருங்கிணைந்த தீர்வை வடிவமைப்பதில் முடிவடைந்தது. எங்களது ஒரே நோக்கம் உடைமைவழி சொத்தின் உரிமை மாற்றத்தைச் செயற்படுத்துவதே.
கனவு காண்பவர்களில் இருந்து செயலாற்றுபவர்களாக உருமாறியவர்களாக, INSPL நிதானத்துடன் தொலைநோக்குப் பார்வையுடன், பரிவுணர்வு உதாசீனத்தை மேலோங்கும் வகையில் எங்கள் மனதும் இதயமும் இணைந்து ஒரு சேவையை வழங்கியுள்ளது.
ஒரு குழுவாக, பிரிந்து வாழும் குடும்பத்திற்கு பணிவுடன் சேவை செய்வோம் என்றும், வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வதற்காக, பிரியமானவரின் இறப்பினால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப உதவுவோம் என்றும் உறுதியளிக்கிறோம்.
நிறுவனர் & துவக்கியவர்