தேவையின் தோற்றம்

மனிதப் பிறவிகளாக நமது வாழ்க்கை நிச்சயமின்மைகளால் சூழப்பட்டுள்ளது; நமது வாழ்வில் ஒன்று மட்டுமே நிச்சயம், அதுதான் நமது இறப்பு. நமது இறப்பைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருந்தாலும், திடீரென அது நமது வாயிற்கதவைத் தட்டும்போது அதன் விளைவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும். பெரும்பாலும் அது முன்னெச்சரிக்கையின்றி வருகிறது. உங்களுக்குப் பிரியமானவர், குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை நீங்கள் இழந்திருந்தால், நீங்கள் துயரத்தை அனுபவிப்பது உங்களுக்கும் அந்த நபருக்கும் இடையேயான உறவினைச் சார்ந்ததாகும். ஒருவரை இழந்த பின்னர் இயல்பு வாழ்க்கைச் சூழல்களை கருத்திற்கொள்ள இடமின்றி பல சந்தர்ப்பங்களில்  உங்களுக்கு எழும் சிந்தனைகளைக் கையாள வேண்டிய சூழலில் இருப்பீர்கள். இந்தச் சமயங்களில், சிலர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி, கடந்து செல்லும்வேளையில், வேறு சிலர் இழப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டு கூட்டிற்குள் அடைந்து விடுவார்கள். துயரத்தில் இருப்பவர்களின் மனங்கள் வேதனையால் சூழப்பட்டிருக்கும்.

பிரியமானவர்களின் இழப்பினால் அதிர்ச்சி மற்றும் வருத்தம் ஏற்பட்டாலும், அதைக் கடந்து சென்று நிதிசார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தத்தான் வேண்டும். அவற்றை நீண்ட நாட்களாகப் புறக்கணிக்க முடியாது. குடும்பத்தின் முதன்மையான வருமானம் ஈட்டுபவரை இழந்திருந்தால் இதை இன்னும் அவசரமாகப் பரிசீலிக்க வேண்டும். இறந்தவருக்குச் சொந்தமான சொத்து மற்றும் செல்வத்தைப் பெறுவது என்பது நிதிப் பாதுகாப்புடன் தொடர்புடையது, அதே சமயம் இதற்கு நிபுணத்துவத்துடன் கூடிய அர்பணிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள்ளான முயற்சி தேவைப்படுகிறது.

‘வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டும்’ , இந்த எண்ணத்தை உற்றார் உறவினர் மனதில் பதிய வைக்க வேண்டும், செயல்முறையைத் தொடங்குவதும் அன்றாடப் பணிகளைச் செய்யத் தொடங்குவதும் முக்கியமாகும்.

இந்தச் செயல்கள் நடைமுறையால் இயக்கப்படுபவை, இதற்கு ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் மற்றும் தவறாமல் பின்தொடர வேண்டும். அவற்றை எவ்வளவு விரைவாகச் செய்கிறோமோ, அவ்வளவு விரைவாக அந்தக் குடும்பம் நிதிசார்ந்த ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பெறும்.

கடந்த காலத்தில், கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் இழப்புக்கு ஆளான குடும்பத்திற்கு இந்தச் செயல்முறையில் உதவத் தயாராக இருந்தனர், ஆனால் இப்போது குடும்பங்கள் சுருங்கிவிட்ட காரணத்தால், குடும்பத்தினர்கள் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர், மேலும் அன்றாட வாழக்கை அலுவல்களைக் கைவிட்டு ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள நேரம் ஒதுக்குவது கடினமாகி வருகிறது. மேலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுவிட்ட உறவுக்காரக் குடும்ப உறுப்பினர்களிடம் இறந்தவரின் சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் பற்றிய விவரங்களைப் பகிர்வதை இயல்பாக உணராமல் போகலாம். ஒவ்வொரு சொத்துவகைக்குமான தனிப்பட்ட சிக்கலான செயல்முறைகள் மற்றும் ஆவணமாக்கல் இவ்விஷயங்களை மேலும் கடினமாக்குகின்றன.

இந்தத் சூழலில்தான் Inheritance Needs Services Pvt. Ltd. (INSPL)  சொத்து உரிமையாளர் இறக்கும்பட்சத்தில் அடுத்து நியமிக்கப்பட்ட பயனாளிக்குச் சொத்தைத் தடங்கல் எதுவுமின்றி உரிமைமாற்றுவதைச் செயலாக்க தனது சேவைகளை வடிவமைத்துள்ளது. INSPL ஒரு தனிநபரின் உயிலுடைமையை செயலாக்குவதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்ய, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்கியுள்ளது. INSPL இல், இறந்துபோன சொத்து உரிமையாளரின் மறைவின்போது நியமிக்கப்பட்ட பயனாளிக்கு அவரது உயிலின்படி அல்லது இறந்தவர் உயில் எழுதிவைக்காமல் இறந்துபோயிருந்தால் பொருந்தக்கூடிய வாரிசுரிமைச் சட்டங்களின்படி தடங்கல் எதுவுமற்ற சொத்து உரிமை மாற்றத்தைச் செயற்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

wpChatIcon