தமல் மின்ட் செய்தித்தாளில் “பேங்கிங் அண்ட் ஃபைனான்ஸ் டிரஸ்ட்’ என்ற வாராந்திர காலத்தை வெளியிடுவதற்குப் பெயர்பெற்ற ஒரு முன்னணி பத்திரிக்கையாளர் ஆவார். HT மீடியா பத்தாண்டுகளுக்கு முன் மின்ட்-ஐ துவங்கியதிலிருந்து அவர் முக்கிய அணியின் ஓர் அங்கமாக இருந்து வருகிறார். தற்போது பிசினஸ் ஸ்டான்டர்ட்ஸ்-இலும் எக்ஸ்பர்ட் காலம்னிஸ்ட்டாக பணிபுரிகிறார். அவர் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் ஆலோசகராகவும் உள்ளார். ‘எ பேங்க் ஃபார் தி பக்’, ‘சஹாரா: தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘பந்தன்: தி மேக்கிங் ஆஃப் எ பேங்க்’, ‘எச்டிஎஃப்சி பேங்க் 2.0 ஃப்ரம் டான் டு டிஜிட்டல், ‘பாண்டிமோனியம்: தி கிரேட் இந்தியன் பேங்கிங் ட்ராஜெடி’ மற்றும் மிக சமீபத்திய “ரோலர் கோஸ்டர் : ஆன் அஃபேர் வித் பேங்க்” போன்ற நிதி தொடர்பான சில ‘சிறந்த விற்பனை’ முத்திரை பெற்ற புத்தகங்களின் ஆசிரியரும் ஆவார்.
ராதாகிருஷ்ணன் நாயர்
”
வங்கி, பங்குகள் மற்றும் காப்பீடு துறைகளில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், IRDA, SEBI மற்றும் ICICI குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் நிர்வாகக் குழு மட்டத்திலான பதவிகளை இவர் வகித்துள்ளார். காப்பீடு மற்றும் பங்குகள் துறையுள் புத்தாக்க முயற்சிகளுக்கு வழிவகுத்ததற்கு பெயர்பெற்றவர்.
அஷோக் பராட்
”
இவர் சார்டட் அக்கவுண்டண்ட் மற்றும் கம்பனி செக்ரட்ரிஸ் ஆஃப் இந்தியாவின் ஃபெல்லோ உறுப்பினரான இவர் யுனிலிவர், எலக்ட்ரோலக்ஸ், பெப்சி, டெல்ஸ்ட்ரா அண்ட் ஹெயின்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் போர்ப்ஸ் & கம்பனி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்றார் மற்றும் பாம்பே சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் முன்னாள் தலைவர், ASSOCHAM இன் MC உறுப்பினர் மற்றும் IIM (L) இன் முன்னாள் கவுரவ விரிவுரையாளரும் ஆவார்.